ப.சிதம்பரம் இன்று வேட்புமனு தாக்கல்

390

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவியிடங்களுக்கான தேர்தல் ஜூன் – 10 ம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் ப.சிதம்பரம் போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ப.சிதம்பரம் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் ம.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேர்தல் அதிகாரி சீனிவாசனிடம் வேட்புமனுவை ப.சிதம்பரம் தாக்கல் செய்தார்.