வைரல் ஆகும் ஓரியோ பஜ்ஜி

468
Advertisement

சமூக ஊடகங்களில் ஓரியோ பஜ்ஜி பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய உணவுப் பழக்கவழக்கத்தில் பஜ்ஜிக்குத் தனி இடமுண்டு. வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய்ப் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, பிரெட் பஜ்ஜி, அப்பளப் பஜ்ஜி என்று பலவிதப் பஜ்ஜிகள் பஜ்ஜிப் பிரியர்களின் நாவுக்கு சுவையூட்டி, மனதை மகிழ்வித்துத் தேவையைப் பூர்த்திசெய்துகின்றன.

தற்போது அகமதாபாத் தெருக்களில் ஓரியோ பஜ்ஜி பிரபலமாகத் தொடங்கியுள்ளது.

பஜ்ஜி மாவில் ஓரியோ பிஸ்கட்டுகளைப் போட்டு எண்ணெயில் வேகவைத்து பச்சை மிளகாயுடன் சட்னி சேர்த்துப் பரிமாறப்படுகிறது. கொஞ்சம் இனிப்பு, கொஞ்சம் காரம் என மாறுபட்ட சுவையுடன் உள்ளதால் ஓரியோ பஜ்ஜிக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

கடந்த பல வருடங்களாக மாலை வேளையில் பஜ்ஜி சாப்பிடுவது தனிக் கலாச்சாரமாகவே உருவாகிவிட்டது. தனி நபராக மட்டுமன்றி, குடும்பத்தோடும் பஜ்ஜி சாப்பிடும் வழக்கமும் தொடர்ந்து வருகிறது.

அதிலும், மழைக்காலத்தில் காலை, மாலை என்று இருவேளையிலும் மழையை ரசித்துக்கொண்டே தேங்காய் சட்னி தொட்டு சூடாகப் பஜ்ஜி சாப்பிடுவதில் ஏற்படும்போது மகிழ்ச்சியே தனிதான்.