தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

592

தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட இலங்கை பகுதிகளில் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக – புதுச்சேரி கடற்கரையை நோக்கி இன்று அது நகரக்கூடும் என்றும், அடுத்த 2 நாட்களில் தமிழக- கேரள பகுதிகளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி கடந்து செல்லும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், அரியலுார், பெரம்பலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலுார், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், சென்னை, வேலுார், காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.