“ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து OPS-ம், இணை ஒருங்கிணப்பாளர் பதவில் இருந்து EPS-ம் விலகிக்கொள்ள வேண்டும்”

37

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணப்பாளர் பதவில் இருந்து எடப்பாடி பழனிசாமியும் விலகிக்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் MLA ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒற்றைத்தலைமை விவகாரத்தில் OPS-ம்,EPS-ம் சண்டையிட்டுக்கொள்வது சரியல்ல என்றும், OPS.

EPSக்கு பதிலாக வேறு ஒருவர் அதிமுக பொதுச் செயலாளராக வந்தால் நல்லது எனவும் கூறினார்.

Advertisement

OPS. EPS சண்டையால் அதிமுக தொண்டர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளதாகவும் ஆறுகுட்டி தெரிவித்தார்.