ஆன்லைனில் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட  நபர்

36

சென்னை மணலியில் ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த நபர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மணலியை சேர்ந்த பெருமாள் என்பவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.

இவர் சம்பாதித்த பணத்தை வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

Advertisement

மொத்த பணத்தையும் இழந்த அவர், ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ள பொருட்களை அடகு வைத்து, அதன் மூலம் கிடைத்த பணத்தையும் ரம்மி விளையாட்டில் இழந்ததாக தெரிகிறது.

இதனையறிந்த பெருமாளின் மனைவி, கணவனை கண்டித்துள்ளார்.

இதனால் விரக்தியில் இருந்த பெருமாள், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.