அசத்தலான கணினிகளை அறிமுகப்படுத்தும் OnePlus! ஆச்சரியமான அம்சங்கள்

40
Advertisement

அண்மை காலங்களில், பெரும்பாலானோரின் கனவு phone ஆகவே மாறியுள்ளது Oneplus.

அதைத் தொடர்ந்து கணினி உலகிலும் இரண்டு அசத்தலான மாடல்களை அறிமுகப்படுத்தி ஆதிக்கம் செலுத்த உள்ளது OnePlus நிறுவனம். வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி, X 27 மற்றும் E 24 ஆகிய இரு gaming மானிட்டர்களை launch செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.

Gaming மட்டுமில்லாமல் அலுவலக பணிகள் மற்றும் ஆன்லைன் கல்விக்கும் ஏற்ற வகையில் சிறப்பான அம்சங்களோடு இந்த கணினிகள் தயாராகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த இரண்டு கணினி மாடல்களில் E 24, X 27ஐ விட சற்று விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாக்காலம் மற்றும் வருட இறுதி வர்த்தகத்தை குறி வைத்து களம் இறங்கும் OnePlus நிறுவனம், கணினி சந்தையிலும் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.