போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு

96

பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகம் முன் நேற்று செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2015ம் ஆண்டில் இருந்து தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அவர்கள் போராட்டதில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

Advertisement

இதற்கிடையே, செவிலியர்களின் கோரிக்கையின் படி, பணி நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்ததையடுத்து, செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அனுமதியின்றி கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட, 2 பிரிவுகளின் கீழ் 487 செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.