நீலகிரி மாவட்டம் மாவனல்லாவில் வெளிநாட்டு பெண் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
புகாரில் நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியில் வசித்து வரும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பார்பரா எலிசபெத், போலி பத்திரங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாகவும், மசினகுடி பகுதியில் பல்வேறு நில மோசடியில் ஈடுப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றிய பார்பரா எலிசபெத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.