தீபாவளி அன்று அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த நியூயார்க் மேயர்

67

நியூயார்க் நகரில் அடுத்த ஆண்டு முதல், தீபாவளி அன்று அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ்,தீபாவளியை பள்ளி விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பது, இந்திய-அமெரிக்க சமூகத்தின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது என்றும், இதன்காரணமாக, அடுத்த ஆண்டு முதல், தீபாவளி அன்று அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கூறினார்.

இதன்மூலம், அனைத்து தரப்பு மக்களும் இந்திய நெறிமுறைகள் மற்றும் பாரம்பரியத்தை அனுபவிக்கவும், கொண்டாடவும் முடியும்” என்றார்.