‘வாரிசு’ ரெண்டாவது பாட்டு ரிலீஸ் எப்போ தெரியுமா?

149
Advertisement

‘வாரிசு’ படத்தின் அப்டேட்களும் சிக்கல்களும் சேர்ந்தே வந்து கொண்டிருக்க, படத்தின் நடன இயக்குநரான ஜானி மாஸ்டரின் ட்விட்டர் பதிவு, அடுத்த பாடல் விரைவில் வெளி வர உள்ளதை சூசகமாக தெரியப்படுத்தியது.

‘ரஞ்சிதமே’ பாடல் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் முன்னிலை பெற்று வர, அடுத்த பாடல் எப்போது வெளிவரும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், படத்தின் 2வது பாடலை டிசம்பர் 4ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து முப்பது ஆண்டுகள் நிறைவு பெறும் நாளாக, டிசம்பர் 4 அமைவதால் அன்று பாடல் வெளியாகும் என வலுவாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பாடல் விஜயை பெருமைப்படுத்தும் விதமாக தளபதி அதிபதி போன்ற பாடல் வரிகளை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. வாரிசு படத்தின் post production பணிகள் ஒருபக்கம் சென்று கொண்டிருக்க, விஜய் விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.