புதிதாக பிறந்த காண்டாமிருக குட்டிக்கு “கீவ்” என்று பெயரிடப்பட்டுள்ளது

313
Advertisement

ஐரோப்பாவில் உள்ள செக்கியா நாட்டில் அமைந்துள்ள மிருகக்காட்சிசாலையில் புதிதாக பிறந்துள்ள அழிந்துவரும் ஒருவகை காண்டாமிருக குட்டிக்கு “கீவ்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

கிழக்கு கருப்பு காண்டாமிருகம் ஒரு அழிந்து வரும் இனமாகும். சமீபத்தில் ஐரோப்பாவில் உள்ள செக்கியா நாட்டில் அமைந்துள்ள மிருகக்காட்சிசாலையில் இந்த வகை காண்டாமிருகம் ஒன்று பிறந்துள்ளது .

Advertisement

அந்த குட்டிக்கு உக்ரேனியப் படைகளுக்கு ஆதரவு அளிக்கும் விதம் உக்ரேனிய தலைநகரின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அதாவது “கிவ்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரஷ்யப் படைகள் தற்போது உக்ரைனில் முன்னேறி வரும் நிலையில் மார்ச் நான்காம் தேதி இந்த காண்டாமிருகம் குட்டி பிறந்ததாகவும் , உக்ரைன்க்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் விதம் இந்த பெயர் வைக்கப்பட்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

பிறந்த குட்டி தாயின் பராமரிப்பில் உள்ளது. மேலும் தினமும் ஒரு கிலோ எடை அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போதைய நிலவரப்படி,இந்த மிருகக்காட்சிசாலையில் சுமார் 14 கிழக்கு கருப்பு காண்டாமிருகங்கள் உள்ளன, அறிக்கையின்படி. 1971 முதல், உயிரியல் பூங்காவில் குறைந்தபட்சம் 47 காண்டாமிருகங்கள் பிறந்துள்ளன.

இந்த வகை காண்டாமிருகங்கள் ருவாண்டா மற்றும் தான்சானியாவை தாயகமாகக் கொண்டவை. வேட்டையாடுதல் காரணமாக காட்டு கிழக்கு கருப்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை சுமார் 800 ஆக குறைந்துள்ளது.