வேளாண் பொருட்கள் குறித்து A to Z அறிய புது அப்ளிகேஷன்…வேளாண் அமைச்சர் அறிவிப்பு !

573
Advertisement

தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அந்தப் பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியின. இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில அறிவிப்புகள் வெளியாகவில்லை என்று எதிர்க்கட்சிகள் மற்றும் சிலர் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது.அதில், இன்று வேளாண்துறையின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 10 மணி முதல் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டபேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

அவர் அறிவித்த பட்ஜெட்டில், வேளாண் பொருட்களின் விதை முதல் விற்பனை வரை அறிய புதிய செயலி உருவாக்கப்பட இருப்பதாகவும், இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.