விக்ரமன் தான் ரியல் வின்னர்! போராட்டத்தில் குதித்த நெட்டிசன்ஸ்

157
Advertisement

பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசனில் நியாயமான அணுகுமுறையும் நேர்மறையான எண்ணமும் கொண்டவராக தொடக்கத்தில் இருந்தே தன்னை முன்னிறுத்தி கொண்டவர் விக்ரமன்.

Youtube செய்தியாளராக பிரபலமான விக்ரமன், பின் விடுதலை சிறுத்தை கட்சியில் சேர்ந்து மாநில இணை செய்தி தொடர்பாளராக ஆனார்.

அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதால், கொள்கை தொடர்பான எதிர்பார்ப்புகளும் மக்களுக்கு அவர் மீது இருந்து வந்தது. விக்ரமனும் அதற்கு ஏற்றார் போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல சமூக கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தார். விக்ரமனின் செயல்பாடுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமில்லாமல் அவர் தான் வெற்றியாளராக தேர்ந்தெடுக்க படுவார் என பெரிதும் எதிர்ப்பார்க்கபட்டது. 

இந்நிலையில், பிக் பாஸ் வின்னராக அசீமும், ரன்னராக விக்ரமனும் அறிவிக்கப்பட்டனர். அறம் வெல்லும் என மேடையில் கூறிய விக்ரமன், பின் அம்பேத்கார் படத்திற்கு பூத்தூவி மரியாதை செய்து ‘ஜெய் பீம்’ என முழக்கமிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், விக்ரமன் தான் ரியல் வின்னர் என நெட்டிசன்கள் VikramanBB6TamilTitleWinner என்ற hashtagஐ ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.