ரன்பிர் கபூர் மற்றும் வாணி கபூர் நடிப்பில் அண்மையில் வெளியான ஷம்ஷேரா திரைப்படம் வசூலில் சொதப்பியதோடு விமர்சகர்களையும் திருப்திப்படுத்த தவறிவிட்டது.
இந்நிலையில், படத்தில் ஒரு சிறு குழந்தையை கையில் வைத்துக்கொண்டு, வாணி சண்டையிடுவது போல இருந்த காட்சிகளில், குழந்தை என காட்ட படக்குழுவினர் ஒரு பொம்மையை கூட பயன்படுத்தாமல், வெறும் துணியை மட்டும் வைத்திருப்பதை கண்டுபிடித்த நெட்டிசன்கள் படக்குழுவை வறுத்தெடுத்து வருகின்றனர்.