புதுக்கோட்டை அருகே, இளைஞரின் மூக்கை உடைத்ததாக காவல்துறை எஸ்.ஐ. மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது…!

95
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார். 

இந்நிலையில், இவர் விராலிமலை எம்ஜிஆர் நகருக்கு சென்று தனது நண்பருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் தனி பிரிவு காவலர் சின்ராசு ஆகிய இருவரும்  தகாத வார்த்தையால் பேசி செல்வகுமாரின் மூக்கை உடைத்தாக கூறப்படுகிறது.  இதில், காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு சென்ற காவல் உதவியாளர் கோவிந்தராஜ் இங்கு தங்க கூடாது என அனுப்பியதாக என தெரிகிறது. எனவே, காவல் உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் தெரிவித்து கொண்டார்.