நாமக்கல் அருகே, பட்டதாரி பெண்ணை கொலை செய்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற கோரி விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….

138
Advertisement

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அடுத்து உள்ள கரப்பாளையத்தை சேர்ந்தவர் நித்தியா.

  இவர் கடந்த பிப்ரவரி மாதம் 11- தேதி அதே பகுதியில் உள்ள ஓடை பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு சென்று போது,  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து  போலீசார் நடத்திய விசாரணையில் 17 வயது சிறுவன் நித்யாவை கொலை செய்ததாக கூறி  சிறுவனை சிறையில் அடைத்தனர்.

  இந்தக் கொலை வழக்கில்  போலீசார் உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என  பொதுமக்கள் குற்றம் சாட்டிகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐ டி க்கு மாற்ற கோரி ஜேடர்பாளையம் நான்கு ரோடு பகுதியில் விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.