வண்ணமாய் ஜொலிக்கும் வானியல் அதிசயம்! அரிய புகைப்படங்களை வெளியிட்ட நாசா

282
Advertisement

இயற்கை அழகின் ஒட்டுமொத்த பிரம்மாண்டத்தை பிரமிப்புடன் பறைசாற்றுவது வானம், நட்சத்திரம், கோள்கள், நிலவு மற்றும் அண்டவெளி போன்றவையே.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அண்மையில் வெளியிட்டுள்ள அரிய வகை விண்மீன் கூட்டத்தின் புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆயிரத்திற்கும் அதிகமான விண்மீன்களை கொண்ட இந்த ‘globular cluster’ ஒரு லட்சத்து அறுபதாயிரம் ஒளி ஆண்டுகளை கடந்து இடம்பெற்றுள்ளது. ஒரே புகைப்படத்தை இருவேறு filterகளால் அலைநீளங்களை ஆய்வு செய்துள்ளது நாசா.

நீல நிறத்தில் ஒளிரும் விண்மீன்களுக்கு சிகப்பு நிறமாக ஒளிரும் விண்மீன்களை விட ஆயுள் குறைவு என நாசா குறிப்பிட்டுள்ளது. இந்த விண்மீன் கூட்டத்தில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் எரிபொருள் தீரும் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.