ராசிபுரம் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது கார் மோதியது.
நாமக்கல் மாவட்டம் பட்டணம் நடுத்தெருவில் வசிக்கும் கண்ணன் என்பவரின் குழந்தை தெருவில் விளையாடியக் கொண்டிருந்தது.
அப்போது, குழந்தை இருப்பதை அறியாத, அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது காரை பின்னோக்கி இயக்கினார்.
இந்த கோர விபத்தால், குழந்தையின் மீறி கார் ஏறி, இறங்கியது.
இதில் படுகாயம் அடைந்த குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று, தடுப்பு அரண் மீது மோதியது.
இந்த விபத்தால், பைக்கில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பான பதபதைக்க வைக்கும் சி்சிடிவி காட்சி வெளியாகியுள்ளது.