என்னது ஒரு சிலிண்டர் விலை 1800 ரூபாயா? அதிர்ச்சியில் மக்கள்…….

96
Advertisement

கடந்த மூன்று வாரங்களாக மணிப்பூர் மாநிலத்தில் உச்சக்கட்ட பதட்ட நிலை நிலவி வருகிறது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் ‘மெய்தி’ இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கேட்டு வரும் நிலையில், அவர்களின் கோரிக்கையை எதிர்த்து பழங்குடியின மக்கள் எதிர்ப்பு பேரணி நடத்தினர்.

இருதரப்பினரிடையே வெடித்த கலவரம் தீவிரமடையவே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர். கலவரத்தின் எதிரொலியாக அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 170 ரூபாயாகவும், ஒரு சிலிண்டரின் விலை 1800 ரூபாயாகவும் உள்ளது.

அதுவும் கள்ளச்சந்தையில் தான் கிடைப்பதால் பெரும்பாலான மக்கள் உணவுப்பொருட்களின்றி தவித்து வருகின்றனர். ஒரு அரிசி முட்டையின் விலை 1800 ரூபாய், 30 முட்டைகள் கொண்ட ஒரு பெட்டியின் விலை 300 ரூபாய் மற்றும் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

கலவரத்தால் பாதிக்கப்படாத மாவட்டங்களிலும் விலைவாசி உயர்வு தலைவிரித்தாடுவதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஆடு, கோழி போன்ற இறைச்சிகள் மட்டும் விலை உயராமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.