தாய் மாமா சிலை மடியில் வைத்து காது குத்து

321
Advertisement

தாய் மாமா சிலையின் மடியில் வைத்து குழந்தைக்கு காது குத்து விழா நடத்தியது நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், விநோபா நகரைச் சேர்ந்த சௌந்தர பாண்டி பசுங்கிளி தம்பதியின் மகன் பாண்டித்துரை. இவர் 2 ஆண்டுகளுக்குமுன்பு விபத்தில் இறந்துவிட்டார்.

இவரது மூத்த சகோதரி பிரியதர்ஷினிக்குத் திருமணமாகி தாரிகாஸ்ரீ என்னும் மகளும், மோனேஷ் குமரன் என்னும் மகனும் உள்ளனர்.

இவர்களுக்குக் காதுகுத்து விழா நடத்த முடிவுசெய்யப்பட்டது. தங்களின் குடும்ப வழக்கப்படி தாய்மாமன் மடியில் வைத்து குழந்தைகள் இருவருக்கும் காதுகுத்து விழா நடத்துவது என்று குடும்பத்தினர் தீர்மானித்தனர்.

அதைத்தொடர்ந்து விபத்தில் இறந்துபோன பாண்டித்துரையின் சிலிக்கான் உருவச்சிலை செய்வதற்கு பெங்களூருவில் ஆர்டர்கொடுத்தனர்.

5 லட்ச ரூபாய் செலவில் தயாரான அந்தச் சிலைக்கு பட்டுவேட்டி, தங்க ஆபரணங்கள் அணிவித்தனர்.பிறகு, சாரட் வண்டியில் அந்தச் சிலை ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டு விழா மண்டபத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

அங்கு தாய்மாமன் சிலையின் மடியில் குழந்தைகள் இருவரும் உட்கார வைக்கப்பட்டு காதுகுத்தும் சடங்கு நடத்தினர்.

அதைப் பார்த்த உறவினர்களும் நண்பர்களும் தம்பியின் மீது அக்கா வைத்துள்ள பாசத்தை நினைத்து நெகிழ்ந்து வாழ்த்தினர்.