சிறுமிக்கு தெரியாமல் பொருத்தப்பட்ட ” மைக்ரோபோன் “

398
Advertisement

உலகளவில் கொரோனா உள்ளட்ட பல பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டு வந்தாலும் , மற்றொரு புறம் சமூகவலைத்தளத்தில் ரசிக்கும்படியான வீடியோ பதிவுகள் உலா வருகின்றன. இதுபோன்று ஒரு வீடியோ தான் தற்போது இணையவாசிகளை ஈர்த்து வருகிறது .

வாஷிங்டனில் வசிக்கும் ஒரு நபர் தனது நான்கு வயது மகள் முதல் முறையாக ஸ்னோபோர்டிங் எனபடும் “பனிச்சறுக்கு” விளையாட்டை விளையாடும் பொது , அவளது தலைக்கவசத்தில் சிறிய வகை மைக்கை பொறுத்தியுள்ளார்.

அதன் பின் நடந்தது தான் சுவாரசியமான ஒன்று .

அந்த சிறுமியின் தந்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்த்துள்ள வீடியோவில் ,

அந்த நான்கு வயது சிறுமி … முதல் முறை பனிச்சறுக்கு விளையாடும் போது , அவள் ஆசிரியத்தியில் பேசும் வார்த்தைகள் பதிவாகியுள்ளது . சிறுமியின் ரசிக்கும்படி உள்ள பேச்சு இணையவாசிகளை ஈர்த்துவருகிறது.

அந்த சிறுமி பணியில் சறுக்கும் பொது ,தன்னைத்தானே ஊக்குவிக்கும் விதம் பேசிக்கொள்கிறாள். அதில் , ‘நான் விழமாட்டேன், ஒருவேளை நான் விழுவேன், அது பரவாயில்லை நாம் அனைவரும் விழ செய்வோம் என்கிறாள். அவளின் நம்பிக்கையைப் பாராட்டிவரும் நெட்டிசன்கள் தங்களின் மகிழ்ச்சியையும் பகிர்ந்துவருகின்றனர்.