“பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவின் B -டீம் இல்லை,” மாயாவதி மறுப்பு

176
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவின் B -டீம் இல்லை என்று மாயாவதி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தேர்தலை சந்தித்தோம் என்றும் மாயாவதி விளக்கம் அளித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக வெற்றி பெற உதவிய மாயாவதிக்கும், ஓவைசிக்கும் பத்மபூஷன் விருது வழங்கவேண்டும் என்று சிவசேனை கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்த கருத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மறுப்பு தெரிவித்தார்.

லக்னோவில் பேட்டி அளித்த மாயாவதி, , பகுஜன் சமாஜ் கட்சி ஒருபோதும் பாஜகவின் B-டீமாக செயல்படவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை மாநில மக்களின் உணர்வு, அரசியல், கொள்கை ஆகியவற்றை மையமாக வைத்தே தேர்தலை சந்தித்தோம் என்று மாயாவதி விளக்கமளித்தார்.

உத்தரபிரதேச மாநில தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்றும் மாயாவதி கூறினார்.