தமிழக ஆளுநரை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்ய…

23
Advertisement

தர்மபுரியில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி  போராட்ட மாநாடு நடைபெற்றது. 

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் ஆளும் பாஜக, தமிழகத்தில் கட்சிகளுடன் சேர்ந்து மத கலவரத்தை உண்டாக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார். இதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உதவியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.