‘டெல்லி அணியில் விளையாட தகுதி அற்றவர்  மணிஷ்’ காட்டமாக விமர்சித்த முன்னாள் வீரர்..

124
Advertisement

நடப்பு IPL சீசனின் 28வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொண்டு விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் ஒரு ரன் மட்டுமே அதிகம் எடுத்து, இந்த சீசனுக்கான முதல் வெற்றியை பதிவு செய்தது.

முந்தைய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த மனிஷ் பாண்டே, தற்போது மோசமான மற்றும் மெதுவான ஆட்டத்தினால் ரசிகர்களின் பொறுமையை சோதித்து வருகிறார்.

அதே போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 41 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த நிலையில், மனிஷ்  23 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களின் அதிருப்தியை வாரி இறைத்து கொண்டுள்ளார். இந்நிலையில், மனிஷ் பாண்டேவை பற்றிய கேள்விக்கு அவரைப் பற்றி பேச நான் விரும்பவில்லை.

மணிஷ் பாண்டே டெல்லி அணியிலேயே இருக்க கூடாது. அதற்கான தகுதி அவருக்கு இல்லை. நாம் அக்சர் படேல் பற்றி பேச வேண்டும். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அவர் சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். மணிஷ் பாண்டே அணியிலேயே இருக்க கூடாது. நான் தேர்வுக்குழு தலைவராக இருந்திருந்தால் மணிஷ் பாண்டே அணியில் இருக்க மாட்டார் என முன்னாள் கிரிக்கெட் வீரரும் விமர்சகருமான ஸ்ரீகாந்த் அளித்துள்ள காட்டமான பதில், கிரிக்கெட் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.