20 வருஷமா தண்ணியே குடிக்கலயா?

308
Advertisement

இங்கிலாந்தை சேர்ந்த ஆண்டி கர்ரி (Andy Currie), சூப்பர்மார்கெட் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

Night shift பணிநேரங்களில் ஏற்படும் உடல் சோர்வை போக்க, பெப்சி குடித்து வந்த ஆண்டி நாளடைவில் அதற்கு அடிமையாகி, தண்ணீர் குடிப்பதையே கைவிட்டுள்ளார்.

20 வருடங்களாக இந்த வாழ்க்கைமுறையை பின்பற்றும் ஆண்டி, ஒரு நாளைக்கு 30 can பெப்சி குடிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இதுவரை 219,000 பெப்சி canகளை குடித்துள்ள இந்த நபர், அதன் மூலம் 8000 கிலோ சக்கரையை உட்கொண்டுள்ளார்.

உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் இப்பழக்கம், வருடத்திற்கு 8,500 டாலர் செலவு வைத்து அவரின் சேமிப்பையும் சூறையாடியுள்ளது.

அதிக உடல் எடை, சக்கரை நோய் அபாயம் காரணமாக பிரபல hypnotist மருத்துவரான டேவிட் கில்முர்ரியை (David Kilmurry) அணுகிய பிறகு தான், ஆண்டி இருபது வருடங்களில் முதல் முறையாக தண்ணீர் குடித்துள்ளார்.

தற்போது சிறிது சிறிதாக பெப்சி குடிப்பதை குறைத்து கொண்டுள்ள ஆண்டியின் உடல்நலம் வெகுவாக முன்னேறி வருவதாக கூறியுள்ள மருத்துவர், அதிக அளவு சக்கரை உட்கொள்ளுதல் நம் உடலின் முக்கிய உறுப்புகளின் மீது தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்துள்ளார்.