திருமணத்துக்கு நிச்சயித்த காதலியை பலி வாங்கிய பூகம்பம்…நெஞ்சை உருக்கும் காதலனின் கதறல்

45
Advertisement

தெற்கு மற்றும் மத்திய துருக்கி , வடக்கு மற்றும் கிழக்கு சிரியா பகுதிகளில் பிப்ரவரி ஆறாம் தேதி முதல் ஏற்பட்ட தொடர் நில நடுக்கங்களால் முப்பத்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

மரணமடைந்த ஒவ்வொருவர் பின்னும் சிதைந்த கனவுகள், உடைந்த உறவுகள், சேராத காதல், மாறாத வலிகள் என்றுமே இருக்கத்தான் போகிறது.

இந்நிலையில், வரிசையாக சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்ட இடத்தில், தன் காதலியின் உடலுக்கருகே அமர்ந்து யூனஸ் எம்ரே காயா பகிர்ந்த கதை கேட்போரை கண் கலங்க செய்து வருகிறது.

Advertisement

ஏப்ரல் மாதம் யூனஸுக்கும் அவரின் காதலி குல்சினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், குல்சின் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தன்னை நிலைகுலைய செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த திருமணம் நடக்காது என தோன்றுவதாக குல்சின் கூறியதாகவும், எப்படி இருந்தாலும் அவரோடு தான் இருப்பேன் என உறுதி அளித்ததாகவும், இது போன்ற அசம்பாவிதம் நிகழும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று கண்ணீருடன் யூனஸ் நினைவு கூறும் காட்சிகள் நெஞ்சை உருக்கும் வண்ணம் அமைந்துள்ளன.