மூட்டை நிறைய சில்லறையுடன் வண்டி வாங்கிய நபர்!

220
Advertisement

வாழ்க்கையில் எல்லோருக்கும் பைக் வாங்குவது என்பது பெரும் கனவு தான்.

சாமானிய மக்களுக்கு பைக் வாங்கும் கனவு அவ்வளவு எளிதில் நிறைவேறி விடாது.

நம்மில் பலர் இஎம்ஐ திட்டத்தில் தான் பைக் வாங்கி இருப்போம். அதேசமயம் சிலர் கொஞ்சம், கொஞ்சமாக பணம் சேர்த்து பைக் வாங்குவது உண்டு.

அது போன்ற ஒரு சம்பவம் அசாம் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

பார்பெட்டா மாவட்டத்தில் ஸ்டேஷனரி கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கு பைக் வாங்க வேண்டும் என்பது நீண்ட கால கனவாக இருந்தது.

இதற்காக கடையில் சேரும் சில்லரை காசுகளை கடந்த 6, 7 மாதங்களாக அவர் சேமித்து வந்தார்.

இறுதியாக பெரும் தொகை சேர்ந்துவிட்டது என்பது தெரியவந்ததும், சில்லரை காசுகளை சாக்குமூட்டையில் அள்ளிப்போட்டு கொண்டு வந்தார் அவர்.

பைக் ஷோரூமிற்கு வெளியே 3 நபர்கள் அந்த காசு மூட்டையை தூக்கி வந்தனர்.

ஷோரூம் பணியாளர்கள் மூட்டையை பிரித்து சில்லரை காசுகளை எண்ணி முடித்தனர்.

தேவையான ரொக்கம் இருப்பது உறுதியானதும், ஸ்டேஷனரி கடைக்காரருக்கு பைக் வழங்கப்பட்டது.