இலங்கையிலிருந்து வந்த இளைஞரிடம் 46 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

210

மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது துபாயில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்து, இலங்கையில் இருந்து மதுரை வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பயணியிடம் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.

அதில் அவரிடம் இருந்து 46 லட்ச ரூபாய் மதிப்புள்ள 900 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து மதுரை சுங்க இலாக நுண்ணறிவு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.