தன் அம்மாவின் மேல் அங்கும் இங்கும் புரண்டபடிபடுத்துறங்கும் அணில் குட்டிகள்

291
Advertisement

அணில்கள் கொறிக்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. அணில்களிடம் முக்கியமான ஒரு சிறப்பு குணம் உள்ளது. அணில் குட்டிகளின் தாய் உணவு தேடச் செல்லும் பொழுது மற்ற விலங்குகளால் கொல்லப்பட்டால் அதன் குட்டிகளை மற்ற அணில்கள் தத்தெடுத்து வளர்க்கும் இயல்பு கொண்டது.

ஒரு கூட்டுக் குடும்பம் போல இவைகளின் வாழ்க்கை இருக்கும்.புதிதாக பிறந்த அணில் குட்டி ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும்.அணில் மரத்தில் இருந்து எடுக்கும் பழ கொட்டைகளை எல்லாம் பிறகு சாப்பிடுவதற்காக ஒளித்து வைத்திருக்கும். ஆனால் இதில் 30 சதவிகிதத்தை மட்டுமே திரும்ப எடுக்கும். மீதி 70 சதவிகிதத்தை மறந்து விடும்.

அது மட்டுமல்லாமல் ஒரு அணில் மறைத்து வைத்திருக்கும் கொட்டைகள் வேறு பல விலங்குகளாலும், பிற அணில்களும் சாப்பிடும். அது போக மீதி இருக்கும் 70 சதவிகிதம் கொட்டைகளை அணில் மறந்து போவதால் அந்த கொட்டைகளிலிருந்து அதிக மரங்கள் முளைக்கிறது.

இதனால் மறைமுகமாக அதிக அளவில் மரங்களை காடுகளில் வளர உதவி புரிகிறது. இப்படி காட்டை பாதுகாத்து வளர்ப்பதில் அணிலுக்கு முக்கிய பங்கு உண்டு.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அணில்களை பற்றி.

இணையத்தில் தற்போது ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதயம் கொள்ளைகொள்ளும் விதம் இந்த வீடியோ உள்ளது. அதில் , அணில் குட்டிகள் தன் தாயின் மேல் அங்கும் இங்கும் படுத்து புரண்டு நன்றாக உறங்குகிறது.

இந்த தாய் மற்றும் குட்டிகள் இடையேயான இந்த பாச பிணைப்பை நாம் உணரும் விதம் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. பலரும் இந்த வீடியோவிற்கு உணர்ச்சிப்பூர்வமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.