தான் திருமணம்  செய்துகொள்ளும் பெண்ணின் மகளுக்கு ஆச்சரியம் அளித்த நபர்

116
Advertisement

தான் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணின் மகளுக்கு மோதிரத்தை பரிசளித்த நபரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

இணையத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், நபர் ஒருவர் தன் திருமணத்தில் தான் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணிற்கு பிறந்த சிறுமிக்கு மோதிரத்தை பரிசளிக்கிறார்.

மணமகன் உடையில் மண்டியிட்டு கையில் வைத்திருக்கும் சிறிய அளவு பரிசு பெட்டியை திறந்து, அழகாக உடை அணிந்து நிற்கும் அந்த சிறுமியிடம் திறந்து காட்ட உள்ளே இருக்கும் அந்த மோதிரத்தை ஆச்சரியதுடன் பார்க்கிறாள் அந்த சிறுமி.

Advertisement

பின் அந்த நபர் , மோதிரத்தை கையில் எடுத்து சிறுமியின் விரலில் போட்டு விடுகிறார். ஆனந்தத்தில் அன்பை வெளிப்படுத்தும் விதம் அந்த நபரை , சிறுமி அனைத்துக்கொள்ளும் தருணம் அனைவரையும் கவர்ந்து உள்ளது.

திருமணம் என்றாலே மகிழ்ச்சியான ஒரு தருணம், அதே சமயம் பெண்களுக்கு உணர்ச்சிபூர்வமான தருணம் அமைவதும் இந்நாளில் தான். இது போன்ற ஒரு நாளில் மணமகனின் செயல் அனைவரையும் பாராட்ட வைத்து உள்ளது.