காஷ்மீரில் பனிப்பொழிவு இல்லை – சிறுமியின் புகார் வீடியோ வைரல்

227
Advertisement

காஷ்மீர் பயணத்தின் போது காஷ்மீரில் பனியைக் காண முடியாமல் ஏமாற்றமடைந்த சிறுமியின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது .

 ஜம்மு காஷ்மீரில்  காவல்துறை அதிகாரி இம்தியாஸ் ஹுசைனை ஈர்த்த சிறுமியின் சுட்டித்தனமான பேச்சு , இந்த வீடியோவை அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் பகிர செய்துள்ளது.

வீடியோவில், “பனி எங்கே?”  தன்னால் பனியைப் பார்க்க முடியவில்லை என்று புகாராக தெரிவித்த அந்த சிறுமிக்கு பதிலளிக்கும் விதம் ,தனது ட்விட்டர் பக்கத்தில், Hey,Cutie😍Come again in winter. Promise, it will snow then😊 என்று அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்   காவல்துறை அதிகாரி இம்தியாஸ் ஹுசைன் .

காஷ்மீருக்கு சுற்றுலா வந்தவர்களிடம்   உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்தபோது ,சிறுமி கூறுகையில் ,

தனது பெயர் பௌஷிகா .பூக்களைப் பார்ப்பதற்காகவே தான் வந்ததாகவும் மேலும்  நேற்று முதல், நான் இங்கே இருக்கிறேன். நாங்கள் விமானத்தின் மூலம் வந்தோம்.அது மகிழ்ட்சியாக இருந்தது.எங்களுக்கு ஒரு ஹோட்டல் கிடைத்தது. நாங்கள் ஒரு துலிப் தோட்டத்திற்குச் செல்ல எண்ணினோம் என கூறும் அந்த சிறுமி ஒரு கட்டத்தில் , “நீங்கள் எப்போதாவது காஷ்மீரில் பனியைப் பார்த்திருக்கிறீர்களா? என கேட்கிறார். பின்பு  “சரி, நான் அதைப் பார்க்கவில்லை. ஆனால் நான் அதை மலைகளில் பார்த்தேன்,” என்று கூறுகிறாள் அந்த சிறுமி.

சிறுமியின் இந்த பேச்சு இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளது.