த்ரிஷா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘லியோ’ அப்டேட்! குஷியில் ரசிகர்கள்..

162
Advertisement

கடந்த 20 ஆண்டுகளாக கோலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் த்ரிஷா, தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜயுடன் இணைந்து ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தனது 40வது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடிய த்ரிஷாவின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், விஜய் மற்றும் த்ரிஷா இருக்கும் புகைப்படத்தை ‘லியோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான Seven Screen Studio வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளது.

‘லியோ’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் மற்றும் த்ரிஷா இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. ‘லியோ’ விஜய்க்கு மட்டுமில்லாமல் த்ரிஷாவுக்கும் 67வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.