புது கெட்டப்பில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணன்..நிவின் பாலி போல மாறிய ஆச்சர்யம்..எப்புட்றா?

268
Advertisement

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளராக அறிமுகமாகி, ‘லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் சரவணன்.

படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், சமூகவலைத்தளங்களில் கவனிக்கப்பட கூடிய பிரபலமாக உருவெடுத்தார் லெஜென்ட் சரவணன்.
இதற்கிடையே, ‘லியோ’ படத்திலும் இவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், திருமண விழாவில் கலந்து கொண்ட லெஜண்ட், தன்னுடைய புதிய கெட்டப் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
பிரெஞ்சு தாடி ஸ்டைலில் லேசான தாடி, டிரிம் லுக், அசத்தலான கோட் சூட்டுடன் வந்த லெஜண்டின் புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வரவே, ‘வாட் எ டிரான்ஸ்ஃபர்மேஷன்’, ‘இந்த கெட்டப் மாஸா இருக்கு’, ‘நிவின் பாலி மாறியே இருக்காரு’ என நெட்டிசன்கள் கமெண்டுகளில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.