அடுத்த படமும் ரெடி..அரசியலுக்கும் ரெடி….லெஜெண்ட் சரவணன் அதிரடி

154
Advertisement

தமிழகத்தில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான லெஜெண்ட் சரவணன், தன் துணிக்கடைகளுக்காக எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான விளம்பரங்களில் நடித்து தமிழக மக்களிடம் அறிமுகமானார்.

அடுத்தடுத்து விளம்பரங்களில் நடித்து கொண்டிருந்தவர், கடந்த ஜூலை மாதம் இரண்டாம் தேதி ‘தி லெஜெண்ட்’ என்ற தனது முதல் திரைப்படத்தை ரிலீஸ் செய்து கவனம் ஈர்த்தார்.

800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானாலும் Box Officeஇல் படம் அவ்வளவாக எடுபடவில்லை. இந்நிலையில், கோவையில் நூர் மொஹம்மது என்பவரின் Bridal Makeup ஸ்டுடியோவை திறந்து வைத்த அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அடுத்த படம் பற்றிய கேள்விக்கு, படம் ரெடியாகி கொண்டிருக்கிறது விரைவில் அறிவிப்பேன் என கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து, அரசியலுக்கு வருவீர்களா என தொடுக்கப்பட்ட கேள்விக்கு மக்களும் மகேசனும் நினைத்து அழைத்தால் வருவேன் என நாசூக்காக பதிலளித்துள்ளார்.

மேலும், தற்போதைய அரசு குறித்த கேள்விக்கு தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக லெஜெண்ட் சரவணன் கருத்து தெரிவித்துள்ளார்.