தமிழக பட்ஜெட்டை பாராட்டிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி

340
Advertisement

பல்வேறு எதிர்பார்ப்புக்கு இடையில் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியீட்டுள்ள அறிக்கையில் ,

அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகிற வகையில் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலோடு நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த நிதியமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் அவர்களைப் பாராட்டுகிறேன்.

நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை சமூக நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூபாய் 4,816 கோடி நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மேலும் அறிக்கையில் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கே.எஸ் அழகிரி , சுய உதவிக்குழு மற்றும் வேளாண் கடன் வழங்க ரூபாய் 4,130 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. நகைக் கடன் தள்ளுபடிக்காக ரூபாய் 1,000 கோடியும், வட்டியில்லா பயிர்க் கடன் திட்டத்திற்கு ரூபாய் 200 கோடியும், ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூபாய் 2,800 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பது கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துகிற நடவடிக்கையாகும்.

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சமூகப் பார்வையோடு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதன் அடிப்படையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கான பாதையில் தொடர்ந்து செல்கிற சீரிய முயற்சியாகக் கருதிப் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன். என தெரிவித்துள்ளார்.