மன்னர் சார்லஸின் மர்ம BODYGUARD! மன்னரைத் தாண்டி மக்களின் அன்பை வென்ற ரகசியம்…

170
Advertisement

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி, ராணி இரண்டாம் எலிசபத் காலமானதை அடுத்து அவரின் மகன் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

சார்லஸ் மன்னரின் அதிகாரப்பூர்வ பதவியேற்பு விழா குறித்த செய்திகளை பார்த்து வரும் நேரத்தில், மன்னரின் காவலராக இருந்து கவனம் ஈர்த்த ஒரு Body Guardஐ பற்றி பார்ப்போம். இறந்த ராணியின் பிரத்யேக காவலர் குழு, அவரின் இறப்புக்கு பின் அப்படியே மன்னர் சார்லஸுக்கு வழங்கப்பட்டது. அதிலும் தாடி வைத்த ஒரு PRIVATE BODYGUARD இணையத்தில் தனி கவனம் ஈர்த்து வருகிறார்.

நட்பாக பழகுகிறார் என பத்திரிக்கையாளர்கள் ஒரு பக்கம் certificate கொடுக்கும் பதிவுகளை பார்க்க முடிகிறது. மேலும், மன்னருடன் எங்கு சென்றாலும் இவர் உடன் வருகிறாரா என தேடும் ஒரு கூட்டத்தையே வென்று இருக்கிறார் இந்த bodyguard. மக்கள் மன்னரை ஆர்வமாக phoneகளில் படமெடுக்கும் போது, phoneஐ வைத்து விட்டு அந்த தருணத்தை enjoy செய்யுங்கள் என கூலாக advice வழங்கியும் பிரபலமாகி உள்ளார் இவர். கட்டு மஸ்தான உடல் வாகு, மிரட்டலான தாடி, ஸ்டைலாக இடுப்பில் வைத்திருக்கும் gun என பெயர் கூட தெரியாத இந்த நபரை இங்கிலாந்தில் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்