போட்டியில் ஊக்குவித்த தாய்.. கடுப்பான சிறுமி

547
Advertisement

பொதுவாக குழந்தைகள் வளர்ந்து அவர்களின் அழகான மற்றும் வெகுளித்தனமாக நடந்துகொள்ளும் தருணங்களை பார்ப்பது வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சிகளில் ஒன்றாகும்.

சில சமயங்களில் குழந்தைகளின் இயல்பான பேச்சு மற்றும் வேடிக்கையான நடவடிக்கைகள் அனைவரையும் ரசிக்க வைக்கும்.

இன்ஸ்டாகிராமில் குட் நியூஸ் மூவ்மென்ட் என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில் , ஓட்டப்பந்தயத்தில் சிறுமி ஒருவர் கலந்துகொண்டு கடினமாக ஓடிவரக்கூடியதை காண முடிகிறது.

சிறுமி கடினமாக ஓடி, தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறாள், ஆனால் அவள் எல்லோருக்கும் பின்னால் இருக்கிறாள். அந்த சிறுமியின் தாய் தொடர்ந்து உற்சாகம் படுத்த ஒரு கட்டத்தில் தன் தாயிற்கு அந்த சிறுமி அளித்த பதில் ரசிக்கும் படி உள்ளது.

போட்டியின் ஒரு கட்டத்தில் தாய் ஊக்குவிக்கும் பொது.. அந்த சிறுமி “நான் முயற்சி செய்கிறேன்… எனக்கு சிறிய கால்கள் தான் உள்ளன ” என்று கூறுகிறாள்.

https://www.instagram.com/p/CbjG4SHFgPQ/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

சிறுமியின் இந்த பதில் , அனைவரைம் சிரிக்க வைத்துள்ளது. இணையத்தில் பகிந்து இந்த வீடியோ பலரையும் மீண்டும் மீண்டும் பார்கவைத்துள்ளது. சிறுமின் பதிலை ரசிக்கும் இணையவாசிகள் சிறுமிக்கு ஆதரவாகவும், அவரின் சுட்டித்தனமான பதிலை ரசித்தபடி கமெண்ட் செய்து வருகிறார்கள்.