மருத்துவர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை

250

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கரசங்கால் எல்ஐசி நகரில் வசித்து வருபவர் மருத்துவர் பால்.

இவர் நேற்று வேலைக்கு சென்ற நிலையில், அவரது மனைவி மற்றும் மகளும் வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்படாமல் திறந்து இருந்தது.

Advertisement

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 100 சவரன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.