ராகுல் காந்திக்கு சிறை!!தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு!!…

38
Advertisement

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது அதை விவரிக்கும் காணொலி தொகுப்பாக இது அமையும்.

சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து.

இதன் காரணமாக அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையில், ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.இதை தொடர்ந்து ராகுல், குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூரத் நீதிபதி ஹெச்.எஸ். வர்மாவுக்கு ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர் தான் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.