சென்னை விமானநிலையத்தில், வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் இருந்து, புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தில், அனைத்து விமான சேவைகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது…

82
Advertisement

சென்னை மீனம்பாக்கத்தில், சர்வதேச ஒருங்கிணைந்த புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. 

 இந்த முனையத்தை தமிழக முதல்வர் தலைமையில் பிரதமர் மோடி கடந்த திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் சென்னையில் இருந்து சிங்கப்பூர், குவைத் செல்லும் விமானங்களும், அங்கிருந்து சென்னை வரும் விமானங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.   இதைப்போல் இந்த மே மாதம் சோதனை அடிப்படையில் பல்வேறு விதமான விமானங்கள் புதிய முனையத்திற்கு வந்து செல்ல இருப்பதாக தகவல்கள் வேளியாகி உள்ளன.  

  மேலும் ஜூன் மாதம் முதல் முழு அளவிலான, வழக்கமான சர்வதேச வருகை மற்றும் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.