எப்பவும் முகத்தில் எண்ணெய் வழியுதா? ENDCARD போட நச்சுன்னு நாலு டிப்ஸ்!

30
Advertisement

வெயில் நேரங்களில் முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவது மற்றும் சருமம் கறுப்படைதல் ஏற்படும்.

எண்ணெய் வழிவதை கட்டுப்படுத்தி சிறப்பான சரும ஆரோக்கியத்தை பெற சில எளிய டிப்ஸை follow செய்தாலே போதும். ஒரு டேபிள் ஸ்பூன் கடலைமாவு, அத்துடன் 3 துளி எலுமிச்சை சாறுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் கலந்து 20 நிமிடங்கள் முகத்தில் உலர வைத்து கழுவி வந்தால் எண்ணெய் வழிவதை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

அவோகேடா பழத்தின் தசைப்பகுதியுடன் தேன் சேர்த்து நன்கு குழைத்து facepack போல போட்டால், எண்ணெய் உற்பத்தி கட்டுப்படுத்தப்படுவதுடன் சருமம் பளிச்சென்று காணப்படும். ஆப்பிள் சைடர் வினிகரை பஞ்சில் தோய்த்து முகத்தில் தடவி உலர வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவ சருமத்தின் எண்ணெய்த் தன்மையை குறைக்க முடியும்.

தக்காளியை அரைத்து வடிகட்டி அந்த நீருடன் தேன் கலந்து  பஞ்சில் நனைத்து, முகத்தில் தேய்த்து உலரவிட்டு கழுவினால் முகம் பிரகாசமாக காட்சியளிக்கும். இதே போல முட்டை வெள்ளைக் கருவில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து facepack போல போட்டு கழுவி வந்தாலும் எண்ணெய் வழிவதை கட்டுப்படுத்தி சிறப்பான சரும ஆரோக்கியத்தை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.