செரீனா வில்லியம்ஸின் சுவாரஸ்யமான மறுபக்கம்

237
Advertisement

25 வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இதுவரை 23 Grand Slam Singles Titleகளை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ், இன்று டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் .

புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையாக, சர்வதேச கவனம் ஈர்த்த செரீனாவை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லாத சுவாரஸ்யமான தகவல்களை இத்தொகுப்பில் காண்போம்.

செரீனா வில்லியம்ஸும் அவரின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸும் பள்ளிக்கு செல்லவில்லை. டென்னிஸ் பயிற்சிக்கு அதிக நேரம் கிடைப்பதற்காக அவர்களின் தந்தை, Home Schooling முறையில் அவர்களுக்கு கல்வி கற்பித்தார்.

1999ஆம் ஆண்டு, 17 வயதில் தனது முதல் Grand Slam பட்டத்தை கைப்பற்றினார் செரீனா. 2000ஆம் ஆண்டில் இருந்து 2003ஆம் ஆண்டு வரைக்கும்  Art Institute of Fort Lauderdaleஇல் fashion துறை சார்ந்த படிப்பை பயின்றார் செரீனா. இதன் தொடர்ச்சியாகவே, 2018ஆம் ஆண்டு செரீனா என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை நிறுவினார் செரீனா.

செரீனா மற்றும் வீனஸ் மட்டுமே சகோதரிகளாக அறியப்பட்டாலும், செரீனாவுக்கு மூன்று ஒன்று விட்ட சகோதரிகளும் ஒரு அக்காவும் உள்ளனர்.

மேலும், கடந்த 20 வருடங்களாக அதிக சம்பளம் பெரும் பெண் வீராங்கனையாக விளங்கி வருகிறார் செரீனா. தனது சம்பளத்தில் பெரும்பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளிப்பதை  வழக்கமாக கொண்டுள்ள செரீனா, ஜமைக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் பல பள்ளிகள் கட்டப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளார்.

டென்னிஸில் Grand Slamகள், மதிப்புமிக்க  36 பட்டங்கள் மற்றும் 50 மில்லியனுக்கும் அதிகமான பரிசுப்பணத்தை குவித்துள்ள செரீனா பல விளையாட்டு வீரர்களுக்கும், பெண்களுக்கு உத்வேகமாக திகழ்ந்து வருகிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.