ஆண் கெட்டப் போட்டு “ பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த பெண் “

53
Advertisement

இணையதளம் மூலம் பழகி திருமணம் செய்து பணம் நகை என அனைத்தையும் சுருட்டிவிட்டு பெண்ணை ஏமாற்றிய ஆண்களின் பல உண்மை சம்பவங்களை பார்த்துருக்கிறோம்.

ஆனால் இங்கோ , பெண் ஒருவர் டேட்டிங் செயலி மூலம்  ஆண் போல  ஒரு பெண்ணிடம் பழகி, திருமணமும் செய்து , 15 லட்சத்தை ஏமாற்றிய அதிர்ச்சியூட்டம் சம்பவம் இந்தோனேசியாவில்  அரங்கேறியுள்ளது.

இந்தோனேசியா ஜாம்பி மாகாணத்தை சேர்ந்த  22 வயதான பெண் ஒருவர்,  டேட்டிங் செயலியில் ஒரு நபரை சந்தித்துள்ளார் ,அந்த நபர் தான்  அறுவை சிகிச்சை நிபுணர்  என தெரிவித்துள்ளார்.நாட்கள் கடந்து செல்ல இருவரும் நெருக்கமாக பேசிக்கொள்ள தொடங்கினர்.

Advertisement

மூன்று மாதங்களுக்கு பின், இருவரும்  நேரில் சந்தித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளனர்.அந்த நபரின் ஆவணங்கள்  சமர்பிக்கப்படாததால் இவர்களின் திருமணம் அரசால் அங்கீகரிக்கப்படவில்லை.

இருவரும் வெளிமாகாணத்தில் வசித்துவந்த நிலையில், ஆண் வேடம் போட்டுள்ள பெண் ஆவணகளையும் சமர்ப்பிக்கவில்லை மற்றும் அந்த பெண்ணின் வீட்டில் பணம் கேட்பது,அந்த பெண்ணை வீட்டில் பூட்டிவைத்து மற்றவர்களிடம் தொடர்கொள்ள அனுமதிக்க மறுப்பது என சித்ரவத்தை செய்துள்ளார்.

சில நாட்களுக்கு பிறகு, பெண்ணின் பெற்றோர்  காவல்துறை உதவியுடன் இருவரும் இருக்குமிடத்தை கண்டுபிடித்து ,விசாரணை நடத்தியதில் அந்த ஆண் ஒரு ஆண் அல்ல என்றும் ,அது ஒரு பெண் என்ற  திடுக்கிடும் தகவல் வெளியானது.

கிட்டத்தட்ட பத்து மாதங்கள் பாதிக்கப்பட்டுள்ள  பெண்ணை ஏமாற்றி , 15 லட்சம் ரூபாய் சுருட்டியுள்ளார் அந்த ஆண் வேடமிட்ட அந்த பெண்.பத்து மாதங்களாக தன்னுடன் இருந்தது ஒரு பெண் தான் என எந்த தருணத்திலும் தெரியவில்லையா என கேட்டபோது,அவர் எந்த நேரத்திலும் தான் ஒரு பெண் என்ற சந்தேகம் வராமல்,சில நேரங்களில் கண்களை கட்டிவிடுவார் எனவும் மேலும் பல தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

அந்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த வழக்கில், ஏமாற்றிய அந்த பெண்ணிற்கு பத்து வரை ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.