10வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் ஓமனின் சலாலா நகரில் நடைபெற்றது.
இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 13வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. இதைதொடர்ந்து 20வது நிமிடத்தில் இந்திய அணி தனது 2வது கோலை பதிவு செய்தது.
பாகிஸ்தான் அணி போட்டியின் 37வது நிமிடத்தில் கோல் அடித்தது. இறுதியில், இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஏற்கனவே 2004, 2008, 2015ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, 4வது முறையாக ஆசிய கோப்பையை வென்று அசத்தியுள்ளது.