இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு உறுப்பினர்கள் நீக்கம் – BCCI அதிரடி

36

டி20 உலகக் கோப்பை தோல்வி எதிரொலியாக, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு உறுப்பினர்கள் ஓட்டுமொத்தமாக நீக்கப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த 8வது உலகக் கோப்பை தொடர் அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணியில் வீரர்கள் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் உலகக் கோப்பை தோல்வியை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு உறுப்பினர்கள் ஓட்டுமொத்தமாக நீக்கப்பட்டுள்ளனர்.

சேத்தன் சர்மா உள்ளிட்ட 5 உறுப்பினர்களை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது. அதே சமயம் தேர்வு குழுவில், தலைவர் உள்ளிட்ட 5 பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ-யின் இந்த அதிரடி உத்தரவு கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement