சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா

269
Advertisement

ஆசிய பசிபிக் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் 200 நடுத்தர அளவு வர்த்தக நிறுவனங்களின் பட்டியலை 2022ஆம் ஆண்டிற்கான Forbes இதழின் ஆசிய பதிப்பு வெளியிட்டுள்ளது.

வருடத்திற்கு ஒரு பில்லியன் வருவாய்க்கு மிகாமல் இருக்கும் நிறுவனங்களே இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

‘Best Under a Billion’ என அழைக்கப்படும் இப்பட்டியலில் 2021ஆம் ஆண்டில் 26 நிறுவனங்களுடன் இருந்த இந்தியா தற்போது 24 இந்திய நிறுவனங்களுடன் பின்னடைவை சந்தித்துள்ளது.

எனினும், 22 நிறுவனங்கள் மட்டுமே பட்டியலில் இடம் பிடித்துள்ள சீனாவை பின்னுக்கு தள்ளி ஆசிய அளவில் நடுத்தர வர்த்தகத்தில், இந்தியா நான்காவது இடத்தை கைப்பற்றியுள்ளது.

தென் கொரியா 27 மற்றும் ஜப்பான் 29 நிறுவனங்களுடனும் முன்னிலை வகிக்கும் நிலையில், 30 நிறுவனங்களுடன் ஆசியாவில் தைவான் முதலிடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.