ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

251

தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை நிறைவடைந்த நிலையிலும், தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு 24 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, 32 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.