திருவண்ணாமலையில் பெய்த தொடர் மழை காரணமாக  மஞ்சளாறு மற்றும் நாக நதி ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது…

115
Advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓரிரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஜமுனாமரத்தூர் அடிவாரம் மற்றும் போளூர் அடுத்த அத்திமூர்  மஞ்சளாறு மற்றும் நாகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், அத்திமூர் கிராமத்தில் புகுந்த மழை நீரை அப்பகுதி மக்கள் ஜெசிபி இயந்திரத்தை பயன்படுத்தி, கால்வாய்களை தூர்வாரி தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.