பாகிஸ்தானில், ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்….

54
Advertisement

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கராச்சியில் இருந்து லாகூர் நோக்கி கராச்சி எக்ஸ்பிரஸ் என்ற ரெயில் சென்று கொண்டிருந்தது.

இந்த ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். எனவே அந்த ரெயில் தண்டோ மஸ்தி கான் என்ற ரெயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ரயில் பெட்டி மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

இதற்கிடையே ரெயிலுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இதில், ரயிலில் இருந்த 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.