மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 97 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மின் மோட்டாரை பயன்படுத்தி நிலத்தடி நீர் மூலம் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். பல்வேறு இடங்களில் வயல்களில் தண்ணீரை தேக்கி வைத்து, உழவு செய்து நாற்றங்கால்கள் தயார் செய்து அதில் விதைவிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், வயல்வெளிகள் அனைத்தும் நீர் நிறைந்து காணப்படுகிறது. தற்பொழுது, கடும் கோடை நிலவி வந்த நிலையில் குளம் குட்டைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. கோடை வெப்பம் வாட்டி வரும் நிலையில் வயல்வெளிகளில் தேங்கியுள்ள தண்ணீரை தேடி ஏராளமான பறவைகள் கூட்டம் வயல்வெளிகளில் குவிந்துள்ளன. இதனால், வயல்வெளிகள் பறவைகள் சரணாலயம் போல் காணப்படுகின்றது.